உள்ளடக்கத்துக்குச் செல்

கல்யாணி தாக்கூர் சரள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கல்யாணி தாக்கூர் சரள் (பிறப்பு:1965) இந்தியாவைச் சேர்ந்த வங்காள மொழி தலித் பெண் கவிஞர் ஆவார்.[1] தலித் பெண்களின் விடுதலை, தலித் மக்களின் உரிமைகளுக்காக தீவிரமாக தொடர்ந்து தனது எழுத்து மூலம் வெளிப்படுத்தி வருகிறார்.

வாழ்க்கை மற்றும் எழுத்துப்பணி

[தொகு]

மேற்கு வங்காள மாநிலம் நாடியா மாவட்டத்தின் பகுலாவில் 1965 ஆம் ஆண்டு பிறந்த கல்யாணி தாக்கூர் இளம் வயதிலிருந்தே எழுத்துப்பணி ஆற்றிவருகிறார்.எந்த வெளியீட்டாளரும் அவர் எழுதியதை வெளியிட விரும்பாததால் கல்யாணி தாக்கூர் தனியாக ஏழு புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.[2] ஒரு சுயசரிதை, நான்கு வங்காள மொழி கவிதை புத்தகங்கள், சிறுகதைத் தொகுப்பு மற்றும் கட்டுரைகளின் தொகுப்பு ஆகியவற்றை வெளியிட்டுள்ளார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்யாணி_தாக்கூர்_சரள்&oldid=2926191" இலிருந்து மீள்விக்கப்பட்டது